அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியாவில் திருமணமான சில மணி நேரத்தில் விவகாரத்து செய்து கொண்டனர். சவுதி அரேபியாவில் கோலகலமாக ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முடித்து கொண்டு ஓட்டலுக்கு சென்றனர். அங்கு மணமகள் தனது செல்போனில் நண்பர்களுடன் சேட் செய்து செய்து கொண்டிருந்தார். ஆனால் மணமகன் அவருடன் பேச விரும்பினார். ஆனால் மணமகளோ சேட்டிங் செய்வதிலே ஆர்வமாக இருந்தார். உடனே மணமகன் இது குறித்து கேட்டதற்கு திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் மணமகனோ நான் உனக்கு முக்கியம் இல்லையா என்று கேட்டார். அதற்கு மணமகள் ஆமாம் என்று தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த மணமகன் உன்னை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு ஓட்டலை விட்டு வெளியே சென்றார். சமீப காலமாக சின்ன சின்ன பிரச்சினைகளால் விவாகரத்து செய்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-