அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






வேப்பந்தட்டை அருகே தெருநாய்கள் துரத்தியதில் கம்பிவேலியில் சிக்கி புள்ளிமான் படுகாயம் அடைந்தது. அதனை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.




வறண்டுபோன நீர்நிலைகள்




பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வனப்பகுதி உள்ளது. இவ்வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகிறது. மழை காலங்களில் இந்த மான்கள் அங்குள்ள புல்களை மேய்ந்து நீர்நிலைகளில் தண்ணீரை குடித்து விட்டு வெளியே வராமல் இருக்கும். தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் மான்கள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு அவ்வப்போது வெளியே வருவது வழக்கம்.




தீவிர சிகிச்சை




அவ்வாறு நேற்று வனப்பகுதியை விட்டு ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் அருகே வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்கள் மானை துரத்தியுள்ளது. இதில் கோவில் வளாகத்திலுள்ள கம்பிவேலியில் மான் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தவித்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மானை உயிருடன் மீட்டு வனக்காப்பாளர் ஆனையப்பனிடம் ஒப்படைத்தனர். பின்னர் கால்நடை மருத்துவரை கொண்டு மானுக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-