அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர். மே 1.

மில்லத் நகரில் ஆயிஷா பள்ளி வாசல் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று காலை 8: 30 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு நமதூர் ஜமாத் தலைவர் T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தலமையில் நடைப்பெற்றது. A.ஹிதயத்துல்லா ,A.அப்துல்லா,A.ஜாபர் அலி,V.M. அப்துல் சுபாஹான்,A.சலீம் பாஷா,A.ஜமால் தீன்ஆகியோரின் முன்னிலையில் நடைப்பெற்றது.மில்லத் நகர் பேஷ் இமாம் A.அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் கிராஆத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள்.நமதூர் ஜமாத் செயலாளர் A.பஷீர் அஹம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

பின் அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். அதில் கடுமையாக வெயில் இருப்பதால் இந்நிகழ்ச்சி சுருக்கமாக நடைப்பெருவதாக தெரிவித்தார். இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளி வாசல் திறப்பு விழா நமது பெரம்பலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழகமே நமதூர் பக்கம் திரும்பி பார்க்கும் அளவுக்கு இருக்க அனைவரும் துஆ செய்யும் படி கேட்டுக் கொண்டார். பின் பெரம்பலூர் டவுன் பள்ளி பேஷ் இமாம் M.முஹம்மது ஸல்மான் அன்வாரி அவர்கள் சுருக்கமாக சிறப்புரை ஆற்றினார். அதில் இந்த பள்ளி வாசலுக்கு அதிகமாக அளவில் பொருள் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். நீங்கள் செய்யும் ஒரு செங்கல் அல்லது சிமெண்ட் மூட்டை,கம்பிகள்,கூட நாளை உங்களுக்கு சொர்கத்தில் ஒரு மாளிகை உருவாக்க படுகிறது என தெரிவித்தார்.  

இந்த பள்ளியை உங்கள் வீடு போல தினசரி கட்டிடம் முடியும் வரை தண்ணீர் கூட ஊத்தலாம் என தெரிவித்தார். இறுதியாக நன்றியுரை மில்லத் நகர் நாட்டமை T.M.அப்துல் காதர் அவர்கள் ஆற்றினார்கள். பின்னர் பள்ளி வாசல் நமதூர் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் அடிக்கல் நடப்பட்டது. பின் துஆ ஓதி இந்நிகழ்ச்சி சரியாக 9:30 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் வி.களத்தூர் ,மில்லத் நகர் பகுதி மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 
இந்த பள்ளி வாசல் நல்ல முறையில் கட்டி முடிக்க எல்லாருடைய பங்களிப்பை வழங்கிட இறைவன் கிருபை செய்வனக. 
இதன் புகைப்படம் சில  


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-