அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில், தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

கணினி குலுக்கல் முறை

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில், தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொதுபார்வையாளர் வி.என்.விஷ¢ணு, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான நந்தகுமார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கீதா, தேர்தல் பிரிவு தாசில்தார்கள் மகாராஜன், செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

சின்னங்கள் பொருத்தும் பணி

வாக்குப்பதிவு எந்திரங்களானது வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், அதற்கான அட்டவணையும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் பிற மாநிலங்களிலிருந்து எடுத்துவரப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தேர்தல் அலுவலர் பேபி முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், அவர்களது புகைப்படம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-