அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுரேஷ் (வயது 30), இவர் தனது உறவினர் பிரியா(34), அவரது மகன்கள் தமிழ்செல்வன் (14), சுப்ரமணி(12), மகள் மகேஷ்வரி(10) ஆகியோருடன் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவகுடி அணைக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது சுரேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை ஏற்க மனமில்லாத சுரேசின் உறவினர்கள் உயிர் இருக்கிறது என கூறி டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுரேசை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரேஷ் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-