அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை: சட்டசபை தேர்தலில் திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி கட்சிகளின் கை ஓங்கியுள்ளது.
அம்மாவட்டங்களில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று வாக்காளர்கள் ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு 7 தொகுதிகளில் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது.
சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை தொகுதிகளில் சற்றே ஊசலாட்டமான மனநிலையில் மக்கள் உள்ளனர். விருதாச்சலம் தொகுதியில் திமுக, அதிமுகவைப் போல தேமுதிகவிற்கும் மக்களின் அபரிதமான ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.
திருச்சி, கடலூர் அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் யாருக்கு எந்த தொகுதிகளில் வாக்காளர்களின் ஆதரவு உள்ளதை என்பதை தொகுதிவாரியாக பார்க்கலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-