அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர். மே 7.
 நேற்று ஜூம்மா தொழுகை முடிந்த உடன் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியின் அஇஅதிமுக வேட்பாளர் தமிழ் செல்வன் அவர்கள் நமது ஊர் ஜமாத் தலைவர் T.S.E.லியாக்கத் அலி மற்றும் ஜமாத் நிர்வாகிகள், மர்ரும் ஊர் பொது மக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.  
பின்பு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின் ஜமாத் நிர்வாகிகள் அனைவரையும் சமாதானம் படுத்தினார். பிறகு தமிழ் செல்வன் அவர்கள் நமது ஊர் மக்களிடம் சிறிது உரை ஆற்றினார். அதில் தனது 5 வருடத்தில் வி.களத்தூர் பகுதியில் நிறைவேறிய பணிகள் குறித்து பேசினார். அதில் கல்லாறு பாலம் கட்ட கூடுதல் நிதி தேவை பட்டது எனவும் உடனே நான் தமிழக முதல்வர் அம்மா சந்தித்து மேலும் கூடுதல் நிதி பெறப்பட்டு 8 மாதத்தில்  விரைவாக கட்டி முடிக்கப்பட்டது எனவும்  கூறினார். கடந்த 2012ம் ஆண்டு நான் அரசு மேல் நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி வந்த போது இஸ்லாமிய மாணவிகள் என்னிடம் இந்த பள்ளியில் கழிப்பறை வசதிகள் எதுவும் இல்லை இதனால் நாங்கள் மிகந்த சிரமபடுகிறொம் என கோரிக்கையும், மாணவர்கள் குடிநீர் வசதி இல்லை என கோரிக்கை என்னிடம் வைத்தார்கள். நான் உடனே 15 நாட்களில் புதிய கழிப்பறை கட்ட இரண்டு இலட்சத்தி ஐம்தாயிரமும்,குடிநீர் வசதிக்கு ஒன்னாரை இலட்சம் உடனே எனது சட்ட மன்ற நிதியிலிருந்து எடுத்து கொடுத்ததாக தெரிவித்தார். நான் கடந்த  5 ஆண்டுகளில் 25 முறை உங்கள் ஊர் வந்துள்ளேன். என்னை எளிய முறையில் பார்க்கலாம். வி.களத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை பஸ் வசதியும் நான் செய்து உள்ளேன். பிறகு பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி யில் செய்ய பணிகள் குறித்து பேசினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-