அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கத்னா என்பது ஆண்களின் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீங்குவது எனப் பொருள்படும். கத்னாவை சுன்னத், விருத்தசேனம் எனவும் அழைக்கப்படுகின்றது

கத்னா செய்வது பற்றி அமெரிக்காவின் நவீன ஆய்வுகளின் முடிவுகள்

கத்னா பற்றி அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டொக்டர் ஆரான் தோபியான் தலைமையில் செய்யப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டு 79 சதவீதமாக இருந்த கத்னா செய்வர்களின் எண்ணிக்கை தற்போது 55 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககையும், ஆண்குறி புற்று நோயளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகாரித்துள்ளது. இதனால் கத்னா செய்யாததினால்; ஏற்படும் பாதிப்புக்களினால் அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 4 மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள்; நஷ்டம் ஏற்படுகின்றது. ஆண்கள் ஆண்குறியின் முன்தோலை அகற்றுவதால் ஏற்படும் நன்மைள் அதிகமாக இருந்த போதும் அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணைக்கை குறைந்துள்ளது. எனவே அமெரிக்காவில் கத்னா செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் எச்.ஐ. வி பாதிக்கப்படுவதையும் வீண் செலவுகளையும் குறைக்கலாம் என்றும் டொக்டர் ஆரான் தோபியான் குறிப்பிட்டார்.

கத்னா செய்வது பற்றி கனடா நாட்டின் நவீன ஆய்வுகளின் முடிவுகள்

பிராஸ் நியூஸ் ஏஜென்ஸ் பத்திரிகையில் அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டொக்டர் ஃப்ராங் பிளம்மர் குறிப்பிடும் போது ஆண்கள் கத்னா செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸ் நோயினை அதிக அளவில் தடுக்கலாம் என்று குறிப்பிட்டார்.

கத்னா செய்வது பற்றி பெல்ஜிய நாட்டின நவீன ஆய்வுகளின் முடிவுகள்

டொக்டர் பீட்டர் பையோர் எச்.ஐ.வி. ஆண்களுக்கு பரவுவதில் ஆண் இன உறுப்பின் முன் தோல் பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆண்களுக்கு மத்தியில் எச்.ஐ.வி பரவுவதில் இதுதான் மிக முக்கிய அபாயகரமான காரணியாக திகழ்கிறது என்பதனை கண்டு பிடித்ததாக கூறினார்

ஜெர்மனி நீதிமன்றம் கத்னா செய்வதற்கு தடைவிதித்தது

2012.ஜுன் மாதம் ஜெர்மனியின் கொலெக்னே நீதிமன்றம் இளம் வயதினருக்கு கத்னா செய்வது சட்டவிரோதமானது என தீர்ப்பு அளித்தது. எனினும் ஜெர்மனி அரசு கத்னா மத செயற்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் 2012.09.11 ஆம் திகதி முஸ்லிம்களும் யூதர்களும் மற்றும் 50 சமூக அமைப்புக்களும் இணைந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

ஜெர்மனி பாராளுமன்றம் கத்னா செய்வதற்கு சட்ட அந்தஸ்து வழங்கியது

ஜெர்மனி நீதிமன்றம் கத்னா செய்வதற்கு தடைவிதித்த போதும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் கத்னா பற்றிய விவாதத்தினை பாராளுமன்றத்தில் அதிக பொரும் பன்மையான உறுப்பினர்கள் கத்னாவுக்கு சார்பாக பேசியதால் கத்னா செய்து கொள்வதற்கு சட்ட அந்தஸ்தினை வழங்கியது

கத்னா செய்யவிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி டொக்டர் டொனல்டு

டொக்டர் டொனால்டு குறிப்பிடும் போது எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் மியூகடகஸ் மெம்ப்ரெய்ன் என்ற தோலின் மேற்பகுதி மூலமாக உடலுக்குள் செல்கின்றது. கத்னா செய்யப்படாவிட்டால் முன்தோலின் வெதுவெதுப்பும் , ஈரத்தன்மையும் வைரஸை பெருகச் செய்து. உடலுக்குள் செல்லும் வழியைத் தேடிக் கொள்ளும் வரை அந்த இடத்தில் பாதுகாப்படுகிறது.

டொக்டர் டொனால்டு குறிப்பிடும் போது கத்னா செய்து கொள்வதன் மூலம் உடல் நலத்தை அதிக அளவில் பாதுகாத்துக் கொள்ள முடியும் .கத்னா செய்து கொண்டவர்களின் சிறு நீரகப்பை ,கிட்னி பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்படும் அளவை விட ,கத்னா செய்து கொள்ளாதவர்களின் சிறு நீரகப்பை , கிட்டி 15 மடங்கு அதிகமாக பாதிக்கப்படும்.

2007 ஆண்டு பி.பி.ஸி உலக சேவை வெளியிட்ட தகவல் எச்.ஐ.வி தொற்றினைத் தடுக்க கத்னா செய்யுங்கள்

எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பாக உலகளவிலான மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.ஆண்களுக்கு செய்யப்படும் கத்னாவினை அதிகரித்தால் 60 வீதமாக எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியும் என்பதன் ஆய்வரிக்கையினை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்கின்றன. ஆபிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதன் காரணமாக எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படவில்லை. என்றும் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது என பி.பி.ஸி செய்தி வெளியிட்டது.

2011 ஆண்டு பி.பி.ஸி உலக சேவை வெளியிட்ட தகவல் எச் .ஐ.வி தொற்றினைத் தடுக்க கத்னா செய்யுங்கள்

உலகில் மூன்று கோடி முப்பது லட்சத்திற்கும் அதினமானவர்கள் எச்.ஐ.வியினால் பதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பெண்களில் இருந்து ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் தடுப்பதாற்காக ஆண்கள் கத்னா செய்து கொண்டால் எயிட்ஸ் நோயினை 60 வீதத்தினால் குறைக்க முடியும் என்பதனை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாபே அரசாங்கம் கத்னா செய்யும் திட்டத்தினை அமுல்ப்படுத்தத் தொடங்கியுள்ளது 2025 ஆம் ஆண்டு பத்து லட்சம் ஆண்களுக்கு கத்னா செய்ய முடியும் என்று ஜிம்பாபே அரசாங்கம் தெரிவித்தது.

அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கத்னா செய்தால் எச்.ஐ.வி. பதிப்பை தடுக்கலாம்

அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது. ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றி கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் எச்.ஐ.வி. வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-