அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வெள்ளி, மே 06,2016,
  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தனர்.

சட்டசபை தேர்தல்

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் 915 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், முன்னாள் படைவீரர்கள், என்.சி.சி. அமைப்புகளில் உள்ளவர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 6 பறக்கும் படைகளிலும் தலா ஒரு ‘பி’ குரூப் நிலையிலுள்ள அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 170 பேர்

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக 2 துணை ராணுவ பட்டாலியன் குழுக்கள் வருகை தந்துள்ளனர். ஒரு பட்டாலியன் குழுவில் 85 பேர் வீதம் மொத்தம் 170 பேர் வருகை தந்துள்ளனர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான பட்டாலியன் குழுவிற்கு துணை கமாண்டர் சத்தேந்திரசிங் என்பவரும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான பட்டாலியன் குழுவிற்கு துணை கமாண்டர் தத்திக்கர் என்பவரும் தலைமையேற்றுள்ளனர். பெரம்பலூருக்கான பட்டாலியன் குழுவினர் தண்ணீர்ப்பந்தலில் உள்ள ஆயுதப்படை மைதான வளாகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான பட்டாலியன் குழுவினர் எம்.எஸ்.டி.திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-