அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மே 9 முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
இந்தப் பயிற்சி பெற 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இதில் மிக்ஸி, கிரைண்டர், பேன், அயர்ன் பாக்ஸ், இண்டக்க்ஷன் ஸ்டவ், சிங்கில் பேஸ் மோட்டார் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை பழுது நீக்க பயிற்சியும், செய்முறை விளக்கங்களும் அளிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 30 நாள்களுக்கு தொடர்ந்து பயிற்சி நடைபெறும். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதல் மாடியில் உள்ள, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் மே 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328- 277896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-