அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

டெல்லி : நமோடெல் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தினார். நமோடெல் அச்சே தின் என்ற இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 2,999 அடக்க விலைக்கொண்ட இந்த போன் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் (சிஓடி) இந்த ஸ்மார்ட்போனுக்கு namotel.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் இந்திய குடி மக்களுக்கும், ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என ரெட்டி தெரிவித்துள்ளார். இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை முன்பதிவு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-