அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

சென்னையில் இருந்து அரியலூரை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பெரம்பலூர் எசனை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 32) ஓட்டி வந்தார். அரியலூரை சேர்ந்த இளங்கோவன் கண்டக்டராக இருந்தார். இந்த பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மேலமாத்தூர் பகுதியில் வந்த போது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

7 பேர் படுகாயம்

இதில் பஸ்சிலிருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இந்த விபத்தில் பஸ்சிலிருந்த சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (40) உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்னம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கலியபெருமாள் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-