அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம்:
 வாக்குப்பதிவு
சட்டமன்றத் தொகுதி நிலவரம் 

பெரம்பலூர்:79.54%..பெரம்பலூர் மொத்த வாக்காளர்கள்
2.78.389 
ஆண்கள்-1.36.003 
பெண்கள் -1.42.372
மற்றவரகள  -14
     வாக்கு பதிவு
    2.21.005 79.40% 
  ஆண்கள்- 1.03.533 (76.13%)
  பெண்கள் - 1.17.470 (82.51%) 
  மற்றவர்கள் - 2 (14.29%)

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் கொட்டும் மழையிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் குடையை பிடித்தபடி ஜனநாயக கடமையை ஆற்றினர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி

பெரம்பலூர் சட்டமன்ற (தனி) தொகுதியில் மொத்தம் 322 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. பெரம்பலூரில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே ஏறத்தாழ அரை மணிநேரம் பலத்த மழை கொட்டியது. அதன் பிறகு சிறிதுநேரம் மழை நின்றது.

பிறகு மீண்டும் மழை தொடர்ந்ததால் வாக்காளர்கள் குடைபிடித்து வந்து வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

கலெக்டர் வாக்களித்தார்பெரம்பலூர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான நந்தகுமார், தந்தை ஹேன்ஸ்ரோவர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மையத்திலும், சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, குன்னம் தாலுகா பெருமத்தூரில் உள்ள டி.இ.எல்.சி. பள்ளி மையத்திலும் வாக்களித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சத்திரமனைவேலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மையத்தில் வாக்களித்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை தமிழ்செல்வன், எளம்பலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிமையத்திலும், மக்கள் நலக்கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திரன் காரியானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மையத்திலும், பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் சத்தியசீலன் அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மையத்திலும், பா.ஜ.க. வேட்பாளர் கலியபெருமாள் எசனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திலும் வாக்குப்பதிவு செய்தனர்.

குன்னம் தொகுதி

குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 316 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. குன்னம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் அரணாரையில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி மையத்தில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு நிலவரம்

பெரம்பலூர், குன்னம் ஆகிய இருசட்டமன்றத்தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 11.2 சதவீதம் வாக்குகள் பதிவானது. 11 மணிக்கு 33.41 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.24 சதவீதமும், மாலை 3 மணிக்கு 68.82 சதவீதமும், மாலை 5மணிக்கு 76.81 சதவீதமும் பதிவானது. கடும் வாக்குவாதம்

பெரம்பலூரை அடுத்த நாவலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்படவில்லை என்று வாக்களித்தவர்கள் தெரிவித்தனர். செட்டிகுளத்தை அடுத்த நாட்டார்மங்கலம் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் தி.மு.க.-அ.தி.மு.க. முகவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு அரைமணிநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

மூன்றடுக்கு பாதுகாப்பு

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், குன்னம் சட்டமன்றத்தொகுதியில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தனலட்சுமிசீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு நேற்று இரவு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. இக்கல்லூரியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தரை தளத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் தளத்திலும் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-