அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இந்தியாவின் பிரமாண்டமான கருத்துக் கணிப்பின் முழுமையான முடிவுகள்

நியூஸ் 7 தொலைக்காட்சியுடன், தினமலர் நாளிதழ் நடத்திய பிரமாண்டமான கருத்துக் கணிப்பின் முடிவுகள் பின்வருமாறு..

மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் சென்னை என 5 மண்டலங்களாக பிரித்து கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்திற்கான கருத்துக் கணிப்பின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 57 தொகுதிகளில், திமுக கூட்டணி 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும், மீதமுள்ள 24 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்தது.

இதனை அடுத்து, 57 தொகுதிகளைக் கொண்ட தெற்கு மண்டலத்தின் முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டன. இதில், 30 தொகுதிகளை திமுக கூட்டணியும், 24 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 6 கட்சிகள் இணைந்த பெரிய கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தையும், பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. தெற்கு தொகுதியில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

41 தொகுதிகளை கொண்ட கிழக்கு மண்டலத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் புதன் கிழமை வெளியானது. அதிகபட்சமாக 30 தொகுதிகளை திமுக கூட்டணி சுவீகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளையும், பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 41 தொகுதிகளை கொண்ட வடக்கு மண்டலத்தில் 31 தொகுதிகளை திமுக கூட்டணியும், 10 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன.

இறுதியாக, இன்று வெளியிடப்பட்ட 37 தொகுதிகளை கொண்ட சென்னை மண்டலத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் அதிகபட்சமாக அதிமுக கூட்டணி 20 தொகுதிகளையும், திமுக 16 கூட்டணி தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  
பிரமாண்டமான கருத்துக்கணிப்பு - சென்னை மாவட்டம் (16 தொகுதிகள்)

ஆர்.கே.நகர் தொகுதியில் நூலிலையில் முந்துகிறார் ஜெயலலிதா!

ராயபுரத்தில் எட்ட முடியாத இடத்தில் ஜெயகுமார்!

#அதிமுக + 14 = ஆர்.கே.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவிக நகர் (தனி), எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர்

#திமுக + 2 = கொளத்தூர், வேளச்சேரி

 


234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை. நியூஸ்7, தினமலர் நடத்திய பிரமாண்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, 141 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளது. அதிமுக கூட்டணி 87 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியிலும், பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. 2 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-