அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
டெல்லி: கடந்த 2015ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் இற]ந்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,540 இந்திய தொழிலாளர்களும், குவைத்தில் 611 இந்திய தொழிலாளர்களும், ஓமனில் 520 பேரும், கத்தாரில் 279 பேர், பஹ்ரைனில் 223 பேர் என வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டுமே 2,691 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக தெரிவித்தார். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இயற்கையான மரணம் மற்றும் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-