அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களின் வாயிலாக பல்வேறு வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். வரைவுவாக்காளர் பட்டியலில் வெளியிடும்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 420 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 791 பெண் வாக்காளர்களும், 24 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 235 வாக்காளர்கள் இருந்தனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்குப்பிறகு நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 8,604 பேர் பெயர் சேர்ப்பதற்காக மனு அளித்திருந்தனர். இவர்களில் 8,142 நபர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி 3,778 ஆண் வாக்காளர்களும், 4,363 பெண் வாக்காளர்களும், 1 திருநங்கை வாக்காளரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.வாக்காளர் இறப்பு, இடமாறுதல், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெற்றிருத்தல் உள்ளிட்ட காரணங்களால் 262 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது உள்ள இறுதிப்பட்டியலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி) தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 3 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 327 பெண் வாக்காளர்களும், 14 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 344 வாக்காளர்கள் உள்ளனர்.

5 லட்சத்து 34 ஆயிரத்து 115 வாக்காளர்கள்

குன்னம் சட்டமன்றத்தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 61 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 699 பெண் வாக்காளர்களும், 11 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 726 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 64 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 71 ஆயிரத்து 26 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 115 வாக்காளர்கள் உள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-