அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


எச்சரிக்கை: இப்பதிவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்க்ள் படிக்க தடை! 

பலரும் இதை அறிவதில்லை. ஆனால், ஆரோக்கியமான தாம்பத்திற்கு இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆம், தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு 45 நிமிடத்திற்குள் சிறுநீர் கழித்துவிட வேண்டுமாம். முக்கியமாக பெண்கள்.
உடலுறவில் ஈடுபடும் முன்னர் மட்டுமில்லாது பின்னரும் கூட சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக தாம்பத்திய உறவிற்கு பிறகு சிறுநீர் கழிக்காமல் இருப்பது பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட காரணியாக இருக்கிறது.
தொற்று.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க தவறுவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், இது எதிர்கால உடலுறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தொற்று ஏற்படுவதால் பெண்களுக்கு உறவில் ஈடுபடும் போது வலி மிகுதியாக உணரலாம்.
பாக்டீரியா.
உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர் வடிகுழாய்யில் பாக்டீரியாக்கள் தேங்கியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதை வெளியேற்ற தான் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
நுண்ணுயிர்கள்.
மேலும், பிறப்புறுப்பு மற்றும் மலக்குடல் பகுதி, அதை சுற்றியிருக்கும் பகுதியில் சில நுண்ணியிர்கள், பாக்டீரியாக்கள் தேங்கும். இவை சிறுநீர் வடிகுழாய் பகுதியில் ஊடுருவும். இதனால், சிறுநீர் குழாயில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் மத்தியில் தான் இந்த அபாயம் அதிகம்
சிறுநீர் வடிகுழாய்.
மேலும், பெண்கள் மத்தியில் வெளிப்படும் தூண்டல் (Ejaculation) சிறுநீர் வடிகுழாய் மூலமாக ஏற்படுவதில்லை. எனவே, உடலுறவில் ஈடுபட்ட போது தேங்குபவற்றை சிறுநீர் கழித்தல் மூலமாக தான் வெளியேற்ற முடியும். அதிலும், உறவில் ஈடுபட்ட 45 நிமிடங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம் மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.
ஆணுறை.
ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும் கூட இது போன்ற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
சுகாதாரம்.
மேலும், இது போன்ற தொற்று ஏற்படாமல் இருக்கு உடலுறவில் ஈடுபடும் முன்னர், மற்றும் பின்னர் சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நீர் ஊற்றியாவது பிறப்புறுப்பை கழுவிய பிறகு உறவில் ஈடுபடுங்கள் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

தகவல்– பாலாஜி விஸ்வநாதன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-