அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் . மே 25.


மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் 44 வது  ஆண்டுவிழாவின் துவக்கமாக மதர்ஸா மாணவ மாணவிகள் ஊர்வலம் சரியாக மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டது. வி.களத்தூர் அனைத்து தெரு வழியாக சென்று விழா மேடை வந்து அடைந்தது.       விழா மாலை 4 மணிக்கு துவங்கியது.

*குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலை சொல் கேளதவர் *

என்ற குறள்க்கு இனங்க மாணவ செல்வங்களின் மார்க்க உரையாடல்கள் அறிவுதிறன் அருமையாக அமைத்திருந்தது . சுமார் 125 மாணவ மாணவிகள் பல்வேறு  தலைப்புகளில் சிறப்பாக பேசினார்.        பிறகு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.    பிறகு ஆண்டு விழா தொடங்கியது.    
    வி.களத்தூர் ஜமாத் தலைவர் T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தலமையில் இந்த விழா நடைபெற்றது.செயலாளர் A.பஷீர் அஹம்மது ,பொருளாளர் அப்துல்லா, துனை தலைவர் A.ஹிதயத்துல்லா,துனை செயலாளர் A.ஜாபர் அலி ஆகியோர் முன்னிலையில் இந்த விழா சிறப்பாக நடைப்பெற்றது.
முன்னதாக தைக்கால் பள்ளி பேஷ் இமாம் M.பஷீர் அஹமது அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. பின் மதர்ஸா பள்ளி ஆசிரியர்  M.சாதிக் பாஷா அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார். பின் மில்லத் நகர் பள்ளி பேஷ் இமாம் A.அஷ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.      
சிறப்பு பேச்சாளர் நீடுர் மிஸ்பாஹீல் ஹுதா அரபி கல்லுரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி A.ஷபியுல்லா அவர்களுக்கு நமதூர் ஜமாத் தலைவர் T.S.E.லியாக்கத் அலி அவர்கள் பொன்னாடை போற்றி கெளரவிக்கப் பட்டத்து.
பிறகு இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் தொடங்கியது. சமுதாய வீழ்ச்சிக்கு காரணம் ஆண்களா? அல்லது பென்களா? என்ற தலைப்பில் பள்ளி மதர்ஸா மாணவ மாணவிகள் உடன் பேராசிரியர் மௌலானா மௌலவி A.ஷபியுல்லா அவர்கள் தலமையில் சிறப்பாக நடைபெற்றது.   மௌலானா மௌலவி A.ஷபியுல்லா அவர்கள் பட்டி மன்ற தொடக்க உரை ஆற்றினார்.  பிறகு ஆண் களே காரணம் என 3 மாணவிகள் சிறப்பாகவும்,பெண்களே காரணம் என 3 மாணவர்கள் பேசினார். குறிப்பாக மாணவிகள் சிறப்பாக பேசினார்கள்.
பிறகு சிறப்புரை பேராசிரியர்  மௌலானா மௌலவி A.ஷபியுல்லா ஆற்றினார். அதில் நபிகள் நாயகம் வாழ்ந்த இல்லறம் பற்றி சிறப்பாக பேசினார். பின் சமுதாய வீழ்ச்சிக்கு காரணம் ஆண்களே என  தீர்ப்பு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சி மாலை 4 மணி முதல் மிக சிறப்பாக நமது ஊர் பள்ளியின் புதிய பேஷ் இமாம் மௌலானா மௌலவி ஹாபிழ் S.அப்துல் ரஷீத் மிஸ்பாஹி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.  இறுதியாக இஸ்லாமிய இளைஞர்  நற்பணி மன்றத்தின் உறுப்பினர் மற்றும் மதர்ஸா ஆசிரியர் M.முஹம்மது சரிப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பின் வி.களத்தூர் முன்னாள் பேஸ் இமாம் M.H. நூருல்லா ஹஜ்ரத் அவர்கள் துஆ  உடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
கல்லாறு. காம் இந்த நிகழ்ச்சி முழுவதும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
புகைபடம்  கீழே


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-