அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் அருகே கோடை விடுமுறையை கழிப்பதற்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மரத்தில் கார் மோதி விபத்து

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவருடைய மனைவி வசந்தி (வயது 33). இவர்களுடைய மகன் ஹரிஷ் (8). மகள்கள் ஹரினி (6), ஜனனி(1). குழந்தைகளுக்கு பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால் வசந்தி தனது 3 குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வெங்கல்பட்டி பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அந்த காரை வசந்தியின் சகோதரர் செந்தில் குமார் (28) ஓட்டி சென்றார். அந்த கார் சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் இந்திரா நகர் அருகே நேற்று இரவு 7.45 மணியளவில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரமாக இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

இந்த விபத்தில் காரின்இடிபாடுகளுக்குள் சிக்கிய வசந்தி, அவரது மகன் ஹரிஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரர்கள் காரினுள் சிக்கி படுகாயமடைந்த குழந்தைகள் ஹரினி, ஜனனி மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அந்த 2 குழந்தைகளுக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-