அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியாவில் இருக்கும் ஏ.டி.எம். இயந்திரங்களில் 3-ல் ஒரு பங்கு இயந்திரங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


மும்பை:

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் வங்கி சேவைகளை எளிதாக கிடைக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு முனைப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் 3-ல் ஒரு பங்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் எப்போதும் வேலை செய்யாமல் அவுட் ஆஃப் ஆர்டராகவே உள்ளதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரம் ஏ.டி.எம். இயந்திரங்களில் ரிசர்வ் வங்கி ஒரு சர்வேயை நடத்தியது. அதில், பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் ஒழுங்காக இயங்குகின்றனவா என புள்ளிவிபர தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அதனடிப்படையில், நாட்டில் பெரும்பாலான ஏ.டி.எம். இயந்திரங்கள் எப்போதும் அவுட் ஆப் ஆர்டராக செயல்படாத நிலையிலேயே இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா மும்பையில் இன்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-