அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பணம்-பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மற்றும் தீவிர நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டுசெல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வரை பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக்குழுவின் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.42 லட்சத்து 64 ஆயிரத்து 400 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில் இதுவரை (29.4.2016 வரை) ரூ.33 லட்சத்து 18 ஆயிரத்து 695 ரொக்கப் பணமும், ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 680 மதிப்பிலான இதர பொருட்களும் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை

தேர்தல் விதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. இதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். விதிமீறல்கள் தொடர்பான புகார் களை தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கி வருகின்றது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-