அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

அரசு பள்ளியில் எஸ்.சரண்யா முதலிடம்

தமிழகம் முழுவதும் நேற்று காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை மாணவ-மாணவிகள் 6 பேர் பிடித்தனர்.

கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சரண்யா 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

2-வது இடம்

லெப்பைக்குடிகாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பி.அன்சுராபானு, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ருபித்ரா, ஆர்.அபிராமி ஆகிய 3 பேர் 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 2-வது இடம் பெற்றனர்.

3-வது இடம்

அதே பள்ளியை சேர்ந்த மாணவி. வி.புவனேஸ்வரி, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர். முத்துகுமரன் ஆகிய 2 பேர் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் 3-வது இடத்தை பெற்றனர்.

74 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் 30 அரசு பள்ளிகள், 3 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 39 தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 74 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் ஒரு மாணவரும், கணித பாடத்தில் 243 பேரும், அறிவியலில் 423 பேரும், சமூக அறிவியலில் 1,050 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

பாராட்டு

அரசு பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுபள்ளிகளுக்கும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-