அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தனியார் சுயநிதிப் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மே 30-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள், அந்தந்தப் பள்ளிகளில் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெற்றிருந்தால் பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், நலிவடைந்த மாணவர்கள் அதிகளவில் பயன் பெறவும், இந்த வகை சேர்க்கையில் 100 சதவீதம் இலக்கினை அடைய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நன்றி:தினமணி -27 May 2016 03:55 AM

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-