அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 24-ம் தேதி விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெற்றோர்களின் வேண்டுகொளுக்கு இணங்க உயர்கல்வித்துறை செயலரின் ஆலோசனைபடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கணேசன் தெரிவித்தார்.
பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணபித்துள்ளதாகவும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-