அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் மதரசா 22 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐம்பெரும் விழா நேற்று (28.05.2016) நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் T.S.E. லியாக்கத் அலி அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவர்களின் ஊர்வலம் 3.00 மணியளவில் நடைபெற்றது .. ஈத்கா திடலில் தொடங்கி அணைத்து வீதிகளில் நாரே தக்பீர் என்ற வீர முழக்கத்துடன் மாணவர்கள் ஊர்வலம் நடைபெற்றது.. அதன் பிறகு 3,30 மணியளவில் மாணவர்களின் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாணவர்களின் நிகழ்ச்சி சுமார் 7.00 மணி வரை நடைபெற்றது .அதன் பிறகு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசுகளை ஜமாஅத் தலைவர் லியாக்கத் அலி, ஜமாஅத் செயலாளர் பஷீர் அஹமத் ,ஜமாஅத் துணை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் ,ஜமாஅத் துணை செயலாளர் ஜாபர் அலி ,ஜமாஅத் செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் ,மில்லத் நகர் நிர்வாக தலைவர் அப்துல் சுபஹான்,ஜமாஅத் பொருளாளர் அப்துல்லா,நூர் பள்ளி நிர்வாக தலைவர் ஜமால்தீன்,கணக்காளர் சர்தார் உசேன் ,பக்கீர் முஹம்மது,குல் முஹம்மது,கமால் பாஷா, சிறப்பு விருந்தினர் அபூபக்கர்,முஹம்மது இல்யாஸ் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் வழங்கி சிறப்பித்தனர்.


நன்ரி //kallaru.com


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-