அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நான் என்னுடைய இருபது வயதை எட்டாத நிலையில் என்னை சிறையில் அடைத்தார்கள். இப்பொழுது எனக்கு 43 வயதாகிறது. நான் என்னுடைய இளைய தங்கையை கடைசியாக பார்த்த பொழுது அவளுக்கு 12 வயது. ஆனால் இப்பொழுது அவளுடைய மகளின் வயதே 12 ஆகிறது.
என்னுடைய இன்னொரு மருமகளுக்கு அன்று ஒரு வயதாக இருந்தது. இப்பொழுது அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது.
என்னுடைய அண்ணி என்னைவிட இரண்டு வயது இளையவர். ஆனால் அவர் இப்பொழுது பேரக்குழந்தைகள் கிடைக்கப்பெற்று பாட்டியாக இருக்கிறார்.
என்னை சிறையில் அடைத்ததன் மூலம் ஒரு தலைமுறையையே நான் இழந்துள்ளேன்.
மொத்தம் 8,150 நாட்களை நான் சிறையில் கழித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை என் வாழ்க்கை முடிந்து விட்டது. நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நடமாடும் பிணத்தையே.
- நிஸாருத்தீன் அஹமத்.
பாபர் மஸ்ஜித் இடிப்பின் முதலாமாண்டு நினைவு நாளில் ரயிலில் குண்டு வைத்தாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். 23 ஆண்டுகள் கழித்து கடந்த 11 ஆம் தேதி நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவர்.
நன்றி : அன்பின் அறிவழகன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-