அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகள்.
ராமகிருஷ்ணா பள்ளி தாளாளருடன் மாணவ மாணவிகள்.
பெரம்பலூர் மாவட்டம் +2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 96.73% பெற்று இரண்டாமிடத்தை பிடித்து மாபெரும் சாதனை படைத்து உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் நான்கு இடங்களில் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி.
1.ராகுல் 1183

2.அகல்யா 1181

2.மனஸாதேவி 1180

3.கனிஸ்கர் 1180.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் இடத்தை ஸ்ரீராமகிருஷ¢ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ராகுல் பெற்றுள்ளார். இவர், 1200-க்கு 1183 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-196, ஆங்கிலம்-196, இயற்பியல்-196, வேதியியல்-197, உயிரியல்-200, கணிதம்- 198, மொத்தம்- 1183, மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இவர், எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவத்துறையில் சாதிக்க உள்ளதாகவும், மருத்துவ மேற்படிப்பு படித்து உலக அளவில் சிறந்த இருதய சிகிச்சை நிபுணராக வரவேண்டும் என்பது தனது லட்சியம் என்றும் தெரிவித்தார். குன்னம் தாலுகா பேரளியில் வசித்து வரும் இவரது பெற்றோர் ராமராஜ்-சுமதி. ராமராஜ் இறந்து விட்டார். சுமதி மருவத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மாணவி அகல்யா 2-வது இடம்

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ¢ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.அகல்யா மாவட்டத்தில் 2-வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 1200-க்கு 1181 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-198, ஆங்கிலம்-192, இயற்பியல்-195, வேதியியல்-199, உயிரியல்-199, கணிதம்-198, மொத்தம்-1181, மாவட்டத்தில் 2-வது இடம் பெற்ற இவர், எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவ சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழில் 198 மதிப்பெண்கள் பெற்று அகல்யா மாநில அளவில் தமிழ்பாடத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர், எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2-வது இடத்தை பெற்று ‘‘தினத்தந்தி’’ வழங்கிய பரிசுகளை பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அகல்யாவின் பெற்றோர் காமராஜ்-யசோதை. காமராஜ் குன்னம் தாலுகா வடக்கலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

எம்.பி.பி.எஸ். படிப்பேன்

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ¢ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மானஸாதேவி மாவட்டத்தில் 3-வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-195, ஆங்கிலம்-193, இயற்பியல்-196, வேதியியல்-198, உயிரியல்- 198, கணிதம்-200, மொத்தம்- 1180, மாவட்டத்தில் 3-வது இடம் பெற்ற இவர், எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவஉயர்கல்வி பயில உள்ளதாக தெரிவித்தார். வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூரை சேர்ந்த மானஸாவின் பெற்றோர் மணிவண்ணன்- கற்பகம். விவசாயியான மணிவண்ணன், ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.

கனிஷ்கர் 3-வது இடம்

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ¢ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கனிஷ்கர் மாவட்டத்தில் 3-வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-189, ஆங்கிலம்-193, இயற்பியல்-198, வேதியியல்-200, உயிரியல்-200, கணிதம்-200, மொத்தம்- 1180, மாவட்டத்தில் 3-வது இடத்தை பெற்ற இவர், எம்.பி.பி.எஸ். படிக்க போவதாக தெரிவித்தார். பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்த கனிஷ்கரின் பெற்றோர் பாலகிருஷ¢ணன்- பரமேஸ்வரி. பாலகிருஷ¢ணன் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கனிஷ்கர் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பாராட்டு

பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள் ராகுல், அகல்யா, மானஸாதேவி, கனிஷ்கர் ஆகியோருக்கும், அவர்களது பெற்றோருக்கும் ஸ்ரீராமகிருஷ¢ணா கல்விக்குழுத்தலைவர் சிவசுப்ரமணியன், செயலாளர் விவேகானந்தன், பள்ளி முதல்வர் கோமதி, துணை முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற 4 மாணவர்களும் கூறும்போது தங்களது பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவ்வப்போது நடத்திவந்த மாதிரிதேர்வுகளும், பள்ளித்தலைவர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்திவந்ததாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம்
பாடப்பிரிவில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை .
*கணிதப்பாடத்தில் 74-நபர்கள் 200-மதிப்பெண்கள்.
*வேதியியல் பாடத்தில் 23-நபர்கள் 200-மதிப்பெண்கள்.
*உயிரியல் பாடத்தீல் 14-நபர்கள் 200-மதிப்பெண்கள்.
*வரலாறு பாடத்தில் 2-நபர்கள் 200-மதிப்பெண்கள்.
*கணக்குப்பதிவியல் பாடத்தில் 1-நபர் 200-மதிப்பெண்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-