அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
​ப்ளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு


ப்ளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் 2 பொது நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர்.
இதற்காக 2,421 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல், 10ம் வகுப்பு பொது தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
அதன்படி, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 25ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி காலை 9:31 முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை, tnresults.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-