அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பிளஸ்2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜஷ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வேணு பிரீத்தா 1193 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
200க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணவர்கள்
வணிகவியல் பாடத்தில் 3084 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 303 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 4341 பேரும், வணிகக் கணிதத்தில் 1072 பேரும், கணிதப் பாடத்தில் 3361 பேரும், தாவரவியல் பாடத்தில் 20 பேரும், விலங்கியல் பாடத்தில் 10 பேரும், உயிரியல் பாடத்தில் 775 பேரும், வேதியியல் பாடத்தில் 1703 பேரும், இயற்பியல் பாடத்தில் 5 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-