அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பள்ளி பஸ்களை கோடை விடுமுறையின் போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்து தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இம்மாவட்டத்தில் மொத்தம் 332 பள்ளி பஸ்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் நேற்று 243 பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாசலபதி முன்னிலையில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பஸ்சில் அவசரவழி சரிவர இயங்காமை, வேகக்கட்டுப்பாட்டு கருவி வேலைசெய்யாமை மற்றும் சரிவர பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களுக்காக 16 பஸ்களின் தகுதிச்சான்றிதழை வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்தார். இந்த பஸ்கள் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர் செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் தகுதிச் சான்றிதழ் பெற முடியும். மீதமுள்ள பஸ்கள் பணி மனைகளில் உள்ளதால், அந்த பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஆய்வு செய்த பிறகு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-