அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உத்தரபிரதேசம் மாநிலத்தில் குழந்தை வரம் கேட்டு வந்த 100 அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய கற்பழிப்பு சாமியார் பரமானந்தாவை போலீசார் கைது செய்து உள்ளனர், அவருடைய சீடரும் சிக்கிஉள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் ஆசிரமம் நடத்தி வந்த பரமானந்த் என்ற சாமியார் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கொடுப்பதாகவும், குறிப்பாக ஆண் குழந்தை பெறும் வரத்தை தருவதாகவும் கடந்த 30 ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி வந்துஉள்ளார். போலி சாமியாரின் உண்மையான முகம் தெரியாமல் பரமானந்த் ஆசிரமத்திற்கு குழந்தை பேறு இல்லாத பெண்கள் சாரை சாரையாக சென்றுஉள்ளனர். இதனால் ஆசிரமத்தில் பணம் கொட்டிஉள்ளது. தொழில் அதிபர்களும் அவருடைய ஆசிரமத்திற்கு சென்று உள்ளனர்.


இந்நிலையில் கடந்த மாதம் சாமியார் பரமானந்த்திற்கு எதிராக 3 பெண்கள் கற்பழிப்பு புகார் கூறினர். குழந்தை வரம் தருவதாக கூறி சாமியார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே தெரிவித்தால் வீடியோ படம் பிடித்த அந்தரங்க காட்சிகளை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், உத்தரபிரதேச தொலைக்காட்சி சேனல்களிலும் வேகமாக பரவியது.


இதனைத் தொடர்ந்து சாமியார் பரமானந்த் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. கைதில் இருந்து தப்பிக்க சாமியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சாமியாரின் ஆசிரமத்துக்குள் அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.


அப்போது ஏராளமான ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சாமியார் தனது ஆசிரமத்திற்கு குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்தது, தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய ஆசிரமம் ‘சீல்’ வைத்து மூடப்பட்டது. சாமியாரை கைது செய்ய தனிப்படைகள் அனுப்பட்டது. கடந்த 15 நாட்களாக வலைவீசி தேடிய போலீசார் சாமியாரை மத்திய பிரதேச மாநிலம் சத்னா நகரில் கைது செய்து உள்ளனர். அவருடைய லீலைகளுக்கு உடந்தையாக இருந்த சீடர் அரவிந்த் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


சாமியார் 100–க்கும் அதிகமான அப்பாவி பெண்களை சாமியார் கற்பழித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ‘‘என் மீது எந்த குற்றமும் இல்லை. இவை எல்லாமே என்னை சிக்க வைக்க நடந்த சதிவேலை’’ என்று சாமியார் மறுக்கிறார். போலி சாமியாருக்கு எதிராக 9 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-