
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவக்குமாரும், நாமக்கல் மாவட்டம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேம சுதாவும் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
இதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். இந்த ஆண்டும், வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சதம் அடித்த மாணவர்கள்...
ஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்.
தமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.
கணிதம் பாடத்தில் 18,754 மாணவர்கள்.
அறிவியல் பாடத்தில் 18,642 மாணவர்கள்.
சமூக அறிவியல் பாடத்தில் 39,398 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.
தேர்ச்சி விகிதம்...
மாணவிகள் - 95.9 சதவீதம்
மாணவர்கள் - 91.3 சதவீதம்
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்...
1. | ஈரோடு | 98.48 |
2. | கன்னியாகுமரி | 98.17 |
3. | விருதுநகர் | 97.81 |
4. | ராமநாதபுரம் | 97.1 |
5. | தூத்துக்குடி | 96.93 |
6. | கரூர் | 96.67 |
7. | சிவகங்கை | 96.66 |
8. | தேனி | 96.57 |
9. | பெரம்பலூர் | 96.52 |
10. | கோவை | 96.22 |
11. | நாமக்கல் | 96.00 |
12. | திருச்சி | 95.92 |
13. | மதுரை | 95.68 |
14. | திருப்பூர் | 95.62 |
15. | தஞ்சாவூர் | 95.39 |
16. | கிருஷ்ணகிரி | 95.05 |
17. | திருநெல்வேலி | 95.3 |
18. | தருமபுரி | 94.77 |
19. | புதுக்கோட்டை | 94.46 |
20. | சென்னை | 94.25 |
21. | சேலம் | 94.21 |
22. | ஊட்டி | 93.25 |
23. | காஞ்சிபுரம் | 92.77 |
24. | திண்டுக்கல் | 92.57 |
25. | அரியலூர் | 92.52 |
26. | பாண்டிசேரி | 92.42 |
27. | திருவள்ளூர் | 90.84 |
28. | நாகப்பட்டினம் | 89.43 |
29. | திருவாரூர் | 89.33 |
30. | கூடலூர் | 89.13 |
31. | திருவண்ணாமலை | 89.03 |
32. | விழுப்புரம் | 88.07 |
33. | வேலூர் | 86.49 |
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தற்காலிக மதி்ப்பெண் பட்டியல்களை ஜூன் 1-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்ததேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய மாணவ- மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இவை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், படித்த பள்ளிகளிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இவை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், படித்த பள்ளிகளிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.