அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை திமுக தலைவர் கருணாநிதி ,ஸ்டாலின் உடன் ஒப்பீட்டு பேசிய மனநோயாளி நாகை நாகராஜ் மீது நடவடிக்கை எடுத்திட திமுக தலைமையிடம் ம ம க உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரியதை அடுத்து நாகராஜ் திமுக தலைமையினால் கண்டிக்கப்பட்டுள்ளார்.


தந்தி தொலைக்காட்சியில் பாண்டே என்ற பாசிஸ்ட் முயற்சியினால் ஒளிபரப்ப இருந்த "கோவை குண்டு வெடிப்பு "சம்பந்தமான நிகழ்ச்சியை திமுக வின் டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் மூலமாக எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதோ அதேபோல நாகை நாகராஜ் விசயத்தையும் திமுக விடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது டிஎன்டிஜே அமைப்பு அவசர அவசரமாக உணர்வு பத்திரிகை யில் கருணாநிதி க்கு எதிராக எதற்காக கட்டுரை எழுதுகிறது .?

தன்னை முஸ்லிம்களின் இறைத்தூதர் என்று கருணாநிதியோ ஸ்டாலினோ அறிவித்து கொள்ளாத போது (அறிவித்திருந்தால் நிலைமை வேறாக தான் இருக்கும் ) அதேபோல திமுகவின் மூத்த முன்னோடிகளோ , முக்கிய நிர்வாகிகளோ முன்னாள் அமைச்சர்களோ ,ஏதாவது ஒரு மாவட்ட செயலாளரோ கூறாத போது , ஒரு பைத்தியக்காரன் உளரலுக்காக டிஎன்டிஜே அமைப்பு கருணாநிதி இறைத்தூதரா.? என உணர்வு பத்திரிகையில் கட்டுரை எழுதுவது எந்த வகையில் நியாயமானது .?.

டிஎன்டிஜே வின் "பல இலட்சம்" உறுப்பினர்களில் யாராவது ஒரே ஒருவர் குற்றமிழைத்து விட்டால் அதற்காக டிஎன்டிஜே வின் தலைமை நிர்வாகிகளின் மீதோ , சகோதரர் பி.ஜே. அவர்கள் மீதோ குற்றப்புனைவு செய்வது எப்படி அறிவுடைமை ஆகாதோ அதே போல் தானே இதுவும். திமுக வின் பல கோடி உறுப்பினர்களில் ஒருவன் பைத்தியக்காரனை போல உளரினால் அந்த பைத்தியக்காரனை சந்தித்து தாஃவா செய்வதும் ,அவனுக்கு நேர்வழி காட்டுவதையும் விட்டு விட்டு திமுக தலைவரை விமர்சித்து கட்டுரை எழுதுவது எந்த வகையில் சரியானது.?

திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு போட்டால் , எந்த இடம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு செய்து திமுக வின் கேஎன் நேரு வின் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை வாடகையும் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள தெரிந்த உங்களுக்கு அதே கேஎன் நேருவை சந்தித்து இந்த விசயத்தை சொல்லியிருக்கலாம் தானே.!
அல்லது திமுக வின் முக்கிய புள்ளிகளை சந்தித்து இந்த விசயத்தை முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோருவது தானே நல்ல அணுகுமுறை .!
இதையெல்லாம் விட்டு விட்டு எடுத்த எடுப்பிலேயே கருணாநிதி க்கு எதிரான கட்டுரை , கண்டன ஆர்ப்பாட்டம் என அமர்க்களம் செய்வது எதற்காக ? திருச்சி மணப்பாறை மற்றும் சில ஊர்களில் அதிமுக அடிமைகள் ஜெயலலிதா வை நபிகள் நாயகம் (ஸல்) என பதாகைகள் வைத்தார்களே அதற்காக , "ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா இறைத்தூதரா ? " என கேள்வி கேட்டு உணர்வு பத்திரிகையில் கட்டுரை ஏன் எழுதவில்லை .? ஜெயலலிதா வை கண்டித்து சென்னை யில் ஆர்ப்பாட்டம் செய்யாதது எதற்காக .?

தேர்தல் நிலைப்பாடு எடுக்க மாட்டோம் என சொல்லிவிட்டு மறைமுகமாக திமுக எதிர்ப்பை உங்கள் தொண்டர்களிடம் விதைக்கிறீர்கள் என்ற சந்தேகம் தான் எங்களுக்கு எழுகிறது.

டிஎன்டிஜே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை மறுஆய்வு செய்வது தான் சமுதாயத்திற்கு நல்லது.

நன்றி
- புளியங்குடி S.செய்யது அலி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-