அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்:
Please Share...
குவைத்தில் இனிமுதல் ஒரு Sponsore- யின் கீழ் மூன்று வருடங்கள்  வேலை செய்த தொழிலாளர்கள்  Sponsore அனுமதி இன்றி Visa மாற்றம் செய்து கொள்ளலாம்:
ஏப்ரல் 01:2016
    குவைத் அரசின் Kuwait manpower authority  செய்தி குறிப்பை மேற்கொள்காட்டி குவைத் பத்திரிக்கைகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் குவைத்தில் இனிமுதல் ஒரு Sponsore- யின் கீழ் மூன்று வருடங்கள்  வேலை செய்த தொழிலாளர்கள்  Sponsore அனுமதி இன்றி Visa மாற்றம் செய்து கொள்ளலாம்.  
   இதுவரை குவைத் தொழிலாளர்கள்
வேலை மாற்ற சட்டப்படி Sponsore அனுமதித்தால் மட்டுமே அல்லது
தனக்கு சம்பளம் மற்றும் தன்னிடம்
அவமரியாதையாக நடந்தது கொள்கின்றனர் என்பதை ஆதாரத்துடன் நிருப்பிக்கும் பட்சத்தில்
  வேலை மாற்றம் செய்ய தொழிலாளர் நீதிமன்றம் அனுமதி வழங்கி வந்தது.
ஆனால் இந்த முறையில்  தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் நீதி கிடைக்காமலே போய்விடும்  நிலை  இருந்தது.  
   இதைதவிர Kuwait manpower authority-க்கு தினசரி தொழிலாளர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான புகார்கள் வந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில்
சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சட்ட பிரச்சினை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில்  Kuwait manpower authority சட்ட பிரச்சினைகளை எளிதாக்கும் விதத்தின் முதல்படியாக இந்த  அணையினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
( Thanks: Kuvait தமிழ் பசங்க.

2 கருத்துரைகள்:

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-