அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

SBI Notification

ஸ்டேட் 
வங்கியில்  17 ஆயிரத்து 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 1541 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:


இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜூனியர் அசோசியேட் (கஸ்டமர் சப்போர்ட் அன்ட் சேல்ஸ்)பணிக்கு 10 ஆயிரத்து 726 பணியிடங்களும், ஜூனியர் அக்ரிகல்சரல் அசோசியேட் பணிக்கு 3008 பணியிடங்களும், ஜூனியர் அசோசியேட் (பின்னடைவு) பணிக்கு 3 ஆயிரத்து 218 பணியிடங்களும், ஜூனியர் அசோசியேட் (ஜம்மு, டலாக், டுரா) பணிகளுக்கு 188 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.மொத்தம் 17 ஆயிரத்து 140 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 1541 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மே-ஜூன் மாதங்களில்நடைபெற உள்ளது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் 1-4-2016 தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்களும், ஜூனியர் அக்ரிகல்சரல் அசோசியேட் பணிகளுக்கு வேளாண்மை மற்றும் அது சார்ந்த பட்டப்படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:ஆன்லைன் எழுத்து தேர்வு (முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 25-4-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். புகைப்படம் மற்றும் கையப்பத்தை தேவையான இடத்தில் 'ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக 'ஆன்லைன்' வழியே கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை நிறைவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.statebankofindia.com, www.sbi.co.in. ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-