அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அஸ்ஸலாமு அலைக்கும்..!
நம் வலைத்தளத்தில் 4-5 நாட்கள் முன் 
சவூதியில் வேலை செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி! என்ற செய்தி வெளியிட்டு இருந்தோம் . இது பற்றி ஒரு சவூதி வாழ் தமிழ் சகோதரர் ஒரு விளக்கம் தெரிவித்து உள்ளார்.அது பற்றி பார்ப்போம்.

தற்போது வலைதளம் மற்றும் முகநூலில் தேவை இல்லாத வதந்தியை பதிவு செய்து எல்லாத்தையும் பீதியில் ஆழ்த்தி, எதையும் உன்மை நிலைமையை ஆராயாமல் தனக்கு கிடைத்த செய்தியை அப்படியை தனக்கு நடந்த மாதிரி பதிவிடிகிறார்கள். தேவை இல்லாத பதிவுகளை தவிர்க்கவும்.
தற்போது காலிங் கார்டு (DOLLAR) பயன்பாடு பற்றி பதிவு பற்றி எனது சிறிய விளக்கம்:
இந்த செய்தி நம்பகதன்மையற்றது.
ஊர் செல்லும்போது அதுவும் ஏர்போர்ட்டில் வைத்து, நாம் எவ்வளவு நேரம் பேசி இருக்குமோ அதற்கு நிமிடத்துக்கு 3ரியால் வீதம் நாம் பணம் அபராதமாக கட்டினால் தான் ஊர் செல்லமுடியும் என்று...
ஏன் இதை ஏர்போர்டில் வைத்துதான் கண்டுபிடிப்பார்களா! ? ஏன்
re-entry visa அடிக்கும்போது நமது இக்காமாவில் ஏதாவது அபராதா தொகை நிலுவையில் இருக்கிறதா என்று அறியமுடியாதா ? நிலுவையில் ஏதாவது இருந்தால்
அரசாங்க சம்பந்தமாக எதுவும் செய்ய இயாலாது என்று தெரியாதா ?
மற்றது அந்த காலிங் கார்டு பொதுவாக நாம் பயன்படுத்துவது சவுதி அரசாங்கத்துக்கு வருவாய் இழப்புதான் அப்படியயை சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் சாமானிய மனிதர்கள் நம் மீது அல்ல.
சவுதி அரசாங்கம் அந்த application யை தடை செய்யலாம்(BLOCK)
சவுதி நெட்வொர்க் மீறி நம்மால் எதையும் பயன்படுத்த முடியாது. ஆகையால் தேவயற்ற பதிவுகளை பதிவிடவேண்டாம். மற்றது நம் இக்காமா பெயரில் ஏதாவது அபராததொகை இருக்கிறதா என்பதை MOI என்ற தளத்தில் சென்று பார்க்கலாம். நெட் SIM சம்பந்தமாகவோ அல்லது நமது OWN CALLING SIM சம்மந்தமாகவோ அறியவேண்டுமானால் PLAY STOREல் அதற்கான APPLICATION DOWNLOAD செய்தால் நமது இக்காமா பெயரில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரிஞ்சுகிடலாம். தேவையற்ற பதிவுகளை நம்பவேன்டாம். நல்லது செய்கிறோம் என்று தேவையற்ற பதிவுகளை பதிவிடவேண்டாம்.
நன்றி  : கடையநல்லூர்  அப்துல் ரஹீம் .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-