அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் admit செய்யப்பட்டிருந்தாள். Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் ,
வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,treatments என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் !
பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த இரண்டு வார
பணத்திற்காகத்தான்!

லட்சக்கணக்கில் பணமிருந்தால் எவ்வளவு பெரிய முட்டாளையும் டாக்டர் ஆக்கிவிட முடியும் என்ற கொள்கையில் தான் பல மருத்துவ கல்லூரிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன!

அது போன்ற டாக்டர்கள் இயற்கையான பிரசவத்திற்கு முயற்சி எடுப்பதே இல்லை, அவர்களுக்கு அது தெரியவும் தெரியாது! இயற்கை பிரசவம் அரிதாக போய் சிசேரியன் தான் இப்போது சீசனாகிவிட்டது!! இரண்டு வாரத்திற்கு பிறகு
Discharge செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்!! குடும்பத்தினர் உறவினர் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அந்த குழந்தையை பெற்ற தாய்க்கு பெரிதாய் மகிழ்ச்சி இல்லை,

அவள் சொன்ன காரணம்,

குழந்தை பிறப்பது பற்றி எவ்வளவோ கனவுடன் இருந்தேன், எலும்பு நொறுங்கும் அளவுக்கு வலி இருந்தாலும் தாயாகப்போகிறோம் என்கின்ற சந்தோஷத்தில் எல்லாவலியையும் பொறுத்துக்கொண்டு இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன், ஆனால் மயக்கமருந்து கொடுத்து மயக்கம் தெளிந்தபின் இதுதான் உன் குழந்தை என்று கையில் கொடுத்தார்கள் அதனால் தாயான உணர்வே எனக்கு இல்லை மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அழுதாள், சுத்தமாக வலி தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஊசி போட்டுக்கொண்டு shopping செய்வது போல் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண் ! பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-