அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் மாற்றுத்திறனாளி சிவக்குமார் (35). பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரை சேர்ந்த பால்ராஜ் மகள் திவ்யபாரதி (25). ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். இவர், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.வெவ்வேறு சாதியை சேர்ந்த சிவகுமாருக்கும், திவ்யபாரதிக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த காதல் ஜோடிக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்தவர்கள் நேற்று திருமணம் நடத்தி வைத்தனர். இந்த திருமணவிழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கருணாநிதி மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அழகர்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் வேல்முருகன், ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ராஜாங்கம், மின்ஊழியர் மத்தியஅமைப்பு அகஸ்டின், சி.ஐ.டி.யு. கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-