அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமன்றி, உள்வட்ட சாலைகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. நந்தகுமார்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தீவிரமாக கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக் குழு மற்றும் விடியோ வியூவிங் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினரால் வாகன சோதனை செய்யப்படும்போது, அவற்றை முழுமையாக விடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யும்போது வாகனத்தின் எண், சோதனை செய்யும் அலுவலர்கள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவை முழுமையாக இடம் பெறும் வகையில் பதிவு செய்ய வேண்டும். இந்த விடியோக்கள் விடியோ கண்காணிப்புக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் மட்டுமன்றி, உள்வட்ட சாலைகளிலும் வாகன தணிக்கையில் அலுவலர்கள் ஈடுபட வேண்டும்.

இந்த வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் கூடுதலாக பணம், பொருள்கள் எடுத்துச்செல்லும் நபர்களிடம், எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்டவற்றை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றார் அவர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ச. மாரிமுத்து (பொது), சிலுப்பன் (கணக்கு), வருவாய் கோட்டாட்சியர் ரா. பேபி, மாவட்ட வழங்கல் அலுவலர் ப. கள்ளபிரான் மற்றும் வட்டாட்சியர்கள், பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-