அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேலைக்காக வெளிநாடு சென்று மாட்டிக்கொண்ட தமிழகப் பெண்...!


சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்று சிக்கி தவித்து வரும் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த லிசா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன. கணவனை பிரிந்து தாயுடன் வாழ்ந்து வந்த லிசா, சிஹாப் என்ற முகவர் மூலம் சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றார்.

அங்கு அபு என்பவரது வீட்டில் லிசா வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக அபுவின் உறவினர் ஒருவர் லிசாவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக லிசா, அவரது தாயாரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக லிசாவை அவரது தயார் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது தொடர்பாக முகவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அபு வீட்டில் லிசா பணம் திருடி விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே, தனது மகள் லிசாவை மீட்டு தருமாறு அவரது தாய் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-