அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கர்நாடக மாநிலத்தில் இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மண்டியாவைச் சேர்ந்த மருத்துவர் நரேந்திர பாபுவின் மகள் அஷிதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முக்தையார் அகமது என்பவரின் மகன் ஷகீலுக்கும் வரும் 17-ம் தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், “இந்து சகோதரர்களே, மண்டியாவில் நடை பெறும் இந்த 'லவ் ஜிகாத்'-ஐ தடுத்து நிறுத்துங்கள். இஸ்லாமியர்களிடம் இருந்து இந்து சகோதிரியை காப் பாற்றுங்கள்” என வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதனிடையே மண்டியா மாவட்ட பாஜக நிர்வாகி மஞ்சுநாத் தலைமையில் பஜ்ரங் தளம், ராம் சேனா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கே.ஆர். சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்துத்துவா அமைப்பினர் அஷிதா வீட்டின் முன்பு திரண்டு, திருமணத்தை நிறுத்தக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் மஞ்சுநாத், மருத்துவர் நரேந்திர பாபுவைச் சந்தித்து, “திருமணம் என்ற பேரில் உங்கள் மகளை மத மாற்றம் செய்கிறார்கள். இதை எங்க ளால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு வேண்டும்

இது தொடர்பாக நரேந்திர பாபு கூறும்போது, “முக்தையார் அகமது குடும்பத்தினர் எங்களது நீண்டகால குடும்ப நண்பர்கள். எங்கள் இரு குடும்பத்தினரின் முழு சம்மதத் துடன் இந்த திருமணம் நடைபெறு கிறது. இதில் யாருடைய தூண்டுத லும் இல்லை. திருமணத்துக்கு பிறகும் எனது மகள் இந்துவாகவே இருப்பார். அவர் மதம் மாறவில்லை. இந்நிலையில் இந்துத்துவா அமைப் பினர் திருமணத்தை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தியது அதிர்ச்சி யாக இருக்கிறது. எனவே இந்த திருமணத்துக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

மணப்பெண் அஷிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நானும் ஷகீலும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பெங்களூருவில் எம்பிஏ படிக்கும்போது காதலிக்க தொடங்கினோம். பல ஆண்டுகள் கழித்து எங்கள் காதல், திருமணத்தின் மூலம் வெற்றி பெற இருக்கிறது. இதில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. எங்கள் திருமணம் நல்லபடியாக நடக்க உங்களது (நண்பர்கள்) வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் தேவை” என உருக்கமாக எழுதியுள்ளார்.

The duo, both MBA graduates and whose fathers were childhood friends, have been in love with each other for the last 12 years. (Representational Image)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-