அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப்.23-பெரம்பலூரில் சட்ட மன்ற தேர்தல் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
ஆய்வுக்கூட்டம்!
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சட்டமன்றத்தேர்தலை சிறப்பாகவும், நேர்மையாகவும் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு பார்வையாளர்களாக பிரசன்ஜித்சிங் மற்றும் சஞ்சிவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நடைபெறவுள்ள சட்டமன்றபொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளராக ராஜேஷ் கவுலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

கூட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆகியோர் தலைமை தாங்கினர். தேர்தல் நடவடிக்கைகள்அப்போது பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சட்ட மன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, தீவிர கண்காணிப்புக்குழு, தேர்தல் செலவினக் கண்காணிப்புக்குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் குழு, வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த மாவட்டங்களின் கலெக்டர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

 புகைப்பட கண்காட்சி 
பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டனர்.கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் மீனாட்சி (பெரம்பலூர்), ரவீந்திரன் (அரியலூர்), அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரஸ்வதி கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) கீதா (பெரம்பலூர்), வசந்தி (அரியலூர்) மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-