அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வேப்பூர் கல்லூரி மாணவிகள் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சைக்கிள் ஊர்வலம்

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேப்பூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் ஊர்வலம் வேப்பூரில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை குன்னம் வட்டாட்சியர் ஷாஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தல் 2016-ல் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

விழிப்புணர்வு வாசகங்கள்

ஊர்வலத்தில் “நம்மை நாமே ஆளுகின்ற ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் அனைவரின் உரிமையும், கடமையுமாகும். சட்டத்திற்கு உட்பட்டு சாதி, மதம், இனம், மற்றும் மொழி வேறுபாடுகளை களைந்து நேர்மையுடன் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம்” என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவிகள் கலந்து கொண்டனர். வேப்பூர் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-