அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மஸ்கட்

கேரள மாநிலம் அங்கமாலி காருகுட்டி பகுதியை சேர்ந்தவர் சிக்கு ரோபர்ட்( வயது 28 ). இவர் அங்குள்ல மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் லின்சன் மஸ்கட்டில் சாலஹ்வில் உள்ள ஒருமருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

நேற்று ரோபர்ட் இரவு பணிக்குச் செல்லவில்லை இதை தொடர்ந்து கணவர் தனது மனைவியின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் ரோபர்ட் பிணமாக கிடந்து உள்ளார்.

சிக்குவின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்குவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்குவின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


இது தொடர்பாக பக்கத்தில் வசித்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-