அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அதிகாலை 3.30 அளவில் அந்த விபத்து நடக்கிறது .. அது விபத்து என அறிவதற்கே சில நேரம் பிடிக்க.. அதற்குள்ளாக பல உயிர்கள் போய் விட்டன.

உடனடியாக உம்மன்சாண்டிக்கு விபரம் தெரிவிக்கப்பட , அவர் சூழ்நிலையை உணர்ந்து நரேந்திர மோடி அலுவலகத்துக்கும், ராஜ் நாத் சிங்கிற்கும் தனிப்பட்ட முறையில் பேசி உதவிகள் உடனடி தேவை என கோரிக்கை விடுக்கிறார்..

விடியும் வேளையிலேயே ஹெலிகாப்டர், மருத்துவக்குழு எல்லாம் மத்திய அரசின் சார்பில் வருகிறது.. அந்த காலை நேரத்திலேயே உம்மன் சாண்டி வந்து பார்வைஇடுகிறார்.. கூடுதல் உதவிகளுக்கு உண்டான அவசியங்களை சொல்லிவிட,, மோடி உடனடியாக இரங்கல் தெரிவித்து உடனடியாக கிளம்பி வருகிறார்.. மத்திய மீட்புக்குழு முழு அளவில் இறங்கி மீட்புகளை மாலைக்குள் முடித்து விடுகிறது..


இவை அனைத்தும் சாத்தியமாக காரணம்.. முதலைமைச்சர் என்பவர் அவசர கால சூழல்களில் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்பதே .. அப்படி இறங்கினால் தான் மேல் சொன்ன அனைத்துமே சாத்தியம் ஆகிறது.. அது கடமையும் கூட..

விபத்தின் வீரியத்தை உடனடியாக சொல்லும் அளவு அணுகுமுறை,, அதற்கு அடுத்து உதவிகள் தேவை என்பதை எங்கேதனக்கு கிரெடிட் கிடைக்காமல் போகுமோ என்று நோக்காமல் உதவி கேட்கும் முனைப்பு எல்லாமே மக்களை நோக்கியதாகவே இருக்கவேண்டும்..

ஆனால் தமிழ்நாட்டில் அப்படியா நடந்தது??
இந்த கேவலம் பிடித்த ஜெயலலிதா என்கிற ஆணவப்பெண்மணியின் நடவடிக்கைகளில்??

வெள்ளம் வந்து ஒரு வாரம் ஆகியும் களத்தில் ஆள் இல்லை..
ஆளையே காணவும் இல்லை.. வெளியே தலைகாட்டாமல் எதோ வெளிநாட்டில் வெள்ளம் வந்தது போல மயிரே போச்சு என முடங்கி கிடந்த இந்த் தற்பெருமை நோய் பீடித்த ஜெயலலிதா எந்த விசயத்தில் உடனடியாக இறங்கினார்?

அங்கே விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் வரும் மத்திய மீட்புக்குழு,
இங்கு
வெள்ளம் வந்து மூன்று நாள் கழித்து வருகிறது!

இதற்கு காரணம் யார்? நிச்சயம் மத்திய அரசு அல்ல..
எல்லாமே தான் செய்ததாகவே காண்பிக்கவேண்டும் என்ற நினைப்பில்.
உருப்படாத துரைசாமி, வளர்மதி போன்ற குதிரை முட்டை கும்பலை வைத்து வேடிக்கை பார்க்கும் வேளையில் தான்,

இளையோர்கள் இனி அரசை நம்பி பயனில்லை என்று களத்தில் இறங்கினார்கள்!

இந்த ஆணவக்காரி ஜெயலலிதா உடனடியாக களத்தில் இறங்கி இருந்தால் எல்லாமே வேகமாக நடந்திருக்காதா?
இந்த ஆணவக்காரி நேரில் வந்திருந்தால் மக்கள் ,அரசாங்கம் தமக்காக இருக்கிறது என்று நினைத்திருப்பார்களாஇல்லையா?
எந்த நினைப்பில் தன் மூஞ்சி இல்லாமல்ஏதும் செல்லகூடாது என்று அலைந்தார் இந்த ஜெயா என்று தெரியவில்லை.!

முதல் வெள்ளம் முடிந்த பின் ஒருவாரம் கழித்து வந்து வாக்காள பெருங்குடி மக்களே என்று வெள்ளத்தின் ஊடே வாக்கு கேட்ட கேடு கெட்ட பெண்மணிக்கு தான் இங்கே மேதாவிகள் என காட்டிக்கொள்ளும் சில அறிவிலிகள் முட்டுக்கொடுத்து வருகிறார்கள்!

ஒரு விபத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் மத்திய அரசு, வெள்ளத்திற்கு தரவில்லை என நினைக்கவில்லை..

பெருவெள்ளத்தில் மூழ்கி கிடந்த போதும் மக்களை பற்றி கவலைபடாமல் ஒரு வாரம் தூங்கிவிட்டு வாட்சப்பில் உருகி நடித்த இந்த ஜெயாவை நிர்வாகி என முட்டுக்கொடுப்பவனை கண்டால் காறி உமிழ தோன்றுகிறது!
ஆனந்த் குமார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-