அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 கோப்புப்படம்.



வேப்பந்தட்டை, ஏப்.5-பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மகன் கார்த்திக் (வயது 3). சிறுவன் கார்த்திக் நேற்று மாலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது வி.களத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் பஸ் மாணவர்களை ஏற்றிக்கொண்டு நெய்குப்பைக்கு வந்தது. அங்கு மாணவர்களை இறக்கிவிட்டு மீண்டும் பஸ் புறப்பட்டபோது எதிர்பாராத விதமாக சிறுவன் கார்த்திக் மீது பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவ னுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் அரும்பாவூரை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-