அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஆர். கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து நிறுத்தப்பட்டிருக்கும் திமுக வேட்பாளர் “சிம்லா முத்துசோழன்” யார்… ?

• மழைவெள்ளம் வந்தபோது ஏற்பட்ட மூழ்கடிக்கப்பட்ட, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை காப்பாற்ற முன்வராத ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கும் இந்த சிம்லா முத்துசோழன் யார்?


• இவர் தலைவர் கலைஞர், தளபதி ஆகியோரின் ஆசிபெற்ற இளம் வேட்பாளர்.

• சர்ச் பார்க் கான்வென்டில் படித்து வழக்கறிஞராக பணி செய்து வரும் பெண் வேட்பாளர்.

• தி.மு.கவின் மூலம் தொடந்து சமூக சேவை செய்து வருபவர்.

• கடும் உழைப்பாளியான இவர் கழகப்பணி, களப்பணி, கழக இணைப்பணியை தொடர்ந்து செய்து வருபவர்.

• தன் தம்பிக்கு மீனவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கலப்பு திருமணம் செய்து வைத்தவர்.

• இவர் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

• ஸ்கூட்டியிலேயே அனுதினமும் தொகுதியை வலம் வந்து மக்களை சந்திப்பவர்.

• மழை வெள்ளம் வந்து ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது தன் உடல்நிலையை காரணம்காட்டி தொகுதி மக்களை பார்க்க
முன்வராதவர் ஜெயலலிதா.

அந்த நேரத்தில் மழைவெள்ள நீரில் இறங்கி களப்பணியாற்றியவர் தான் இந்த சிம்லா முத்து சோழன்.

• இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இப்பொழுதும் எளிமையாக வாடகை வீட்டில் வசித்து வரும் எஸ்.பி. சற்குண பாண்டியன் அவர்களின் மருமகள்தான் இந்த சிம்லா முத்துசோழன்.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் நேரடியாக உணவு வழங்கிய இவர், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியவர்.

மேலும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் உடல்நலனை காப்பதற்கு தொடர்ந்து பல வருடங்களாக
இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.
இதுபோன்ற பல நற்காரியங்களை பதவியில் இல்லாத காலத்திலிருந்தே தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் கழக உடன்பிறப்புகள் அனைவரின் சுகதுக்கங்களிலும் பங்கேற்று வரும் இவர், அனைவரின் ஒத்துழைப்புடன் ஜெயலலிதாவை வென்று, பல நல்லதிட்டங்களை கொண்டு வந்து, ஆர்.கே.நகர் தொகுதியை முன்னேற்றுவதில் உறுதியாக இருக்கிறார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-