அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


புதுடெல்லி,
சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவத்தின் பெயரில் செய்யப்படும் போலி விளம்பரங்களை தடுக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, கேன்சர், டி.பி, சர்க்கரை நோய், குழந்தையின்மை போன்றவற்றிற்கு உடனடி தீர்வு தருவதாக செய்யப்படும் விளம்பரங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்கிறது மத்திய அரசு.
குடல் சம்பந்தமான நோய்கள், வழுக்கை, முடியை கருமையாக்குதல், கண் பார்வைக் குறைபாடை நீக்குதல், மார்பகத்தை பெரிதாக்குதல் உள்ளிட்ட 37 வகையான சிகிச்சைகள் தொடர்பான போலி மருந்து விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம்.
சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ், ஆண்மைக்குறைவு, உடலுறவு இன்பத்தை பெருக்குதல், தோலின் கருநிறத்தை மாற்றுதல், உயரத்தை அதிகரித்தல் போன்றவை குறித்து வெளியிடப்பட்டு வரும் போலி விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை மையப்படுத்தி செய்யப்படும் விளம்பரங்கள் அதற்குரிய முறையான அறிவியல் ஆதாரங்கள், மருந்தின் தரம் குறித்து உண்மை விளக்கம் மற்றும் நிரூபணத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-