அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



 



நைட்டிகளாக மாறும் புர்காகள்
அணிந்தும் அணியாத நிர்வாண நிலை …
விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த
மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம் ..
சொந்த தாய் , மகள் , சகோதரி ,மனைவி நிர்வாணமாக
சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும்
அனைத்து தந்தை , கணவன் , மகன் , சகோதரன்
போன்றோர் மறுமையில் தப்பவே முடியாது .

வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள்
ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா ?
ஊரில் இவ்வாறான மெல்லிய , இருக்கமான நைட்டி
போன்ற புர்காகளை விற்பனை செய்வோர்
இஸ்லாமிய கண்ணோடத்தில் விபச்சாரர்கள் என்ற
குற்றத்திற்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை .

விற்பனையாளர்களே நீங்கள் இவ்வாறான கேவலம்
கெட்ட புர்காகளை உங்களது சொந்த குமரிகளுக்கு
அணிவித்து அழகு தான் பாருங்களேன் .
நீங்கள் உங்ளது பிள்ளைகளுக்கு விரும்பாததை ஏன்
வியாபாரம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல் அங்கங்களை
உலகிற்கு காட்சிப் படுத்துகிறீர்கள் .
முடிவாக கேட்பது யாதெனில் , பெற்றோர்கள்
இது குறித்து கூடிய கவணம் செலுத்துவது
காலத்தின் கட்டாயமாகும் .

மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அந்நிய சக்திகள்
ஊடுருவி எமது வாலிப சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன .
நபியவர்கள் கூறியது போல் ” ஒவ்வொருவரும்
பொறுப்பாளர்களே அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.”
எனவே எல்லோரும் இவ்விசயத்தில் கண்ணும்
கருத்துமாக இருந்து கேடுகெட்ட ஆடைப்
பழக்கங்களிலிருந்து நம் இளம் பெண்களையும் ,
வாலிபர்களையும் பாதுகாப்போம் . இறைவன் பாதுகாப்பானாக… ஆமீன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-