அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியாவில் விரைவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் வாட்ஸ் ஆப் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகமான நேரத்தை சமூக வலைதளங்களில் தான் செலவிடுகின்றனர் அதில் வாட்ஸ் ஆப்பின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

சமீபத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.

இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட end to end encryption என்னும் வசதியின் மூலம் ஒருவரின் வாட்ஸ் ஆப்பில் உள்ள செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த நபரைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு வரக்கூடும் என இந்திய அரசாங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய பாதுகாப்பு வசதியின் மூலம் வாட்ஸ் ஆப் நிறுவனமே அதில் உள்ள செய்திகளை பார்க்க முடியாது. இதற்கு முன் 41பிட் கீ அளவு மட்டுமே என்கிரிஃப்ஷன் செய்யப்பட்டிருந்த வாட்ஸ் ஆப் இப்பொழுது 256பிட் கீ அளவு என்கிரிஃப்ஷன் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தீவிரவாதிகள் மற்றும் நாச வேலையில் ஈடுபடுவோர் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் இது போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தும் போது இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் இது போன்ற அனுமதி எதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-